ஒரிஸ்ஸா மாநிலத்தில் பெர்ஹாம்பூரில் 1932-ல் பிறந்த கே. ஆர். அப்பல நரசய்யாவின் தாய் மொழி தெலுங்கு. பள்ளிப்படிப்பு ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி மாவட்டங்களில். 1949-ல் இந்திய கடற்படையில் Artificer Apprentice ஆகச் சேர்ந்து போர்க் கப்பல்கள் பலவற்றில் 1963 வரை பணியாற்றினார். 1960-ல் விமானந்தாங்கி ‘விக்ராந்த்’தை இந்தியா கொண்டு வருவதற்காக அயர்லாந்து சென்று அக்கப்பலில் வேலைக்கமர்ந்தார். 1963-ல் கடற்படைப் பணி ஒப்பந்தம் முடிவுற்ற போது ஜயந்தி கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் சேர்ந்து வணிகக் கப்பல்துறையில் அனுபவம் பெற்றார். பின்னர் தென் இந்திய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல்களிலும் பல்வேறு நாடுகளுக்கு வாணிப நிமித்தம் சென்றார்.ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் வாரப் - பதிப்பு போன்ற சஞ்சிகைகளில் சிறுகதைகள் எழுதி இலக்கிய ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நரசய்யா விசாகப்பட்டணம் துறை முகத்தில் கப்பல், கடலியல் பொறியாளராக இருக்கிறார்.
eBook details
Title: கடலோடி: Memoirs of a Sailor (Tamil Edition)
Post a Comment for "[DOWNLOAD] கடலோடி: Memoirs of a Sailor (Tamil Edition) by நரசய்யா Narasaiya ~ Book PDF Kindle ePub Free"